git branch
கிளைகளுடன் வேலை செய்வதற்கான பிரதான கிட் கட்டளை. மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git-branch.
- அனைத்து கிளைகளையும் பட்டியலிடுங்கள் (உள்ளூர் மற்றும் தொலைதூர; தற்போதைய கிளை
*மூலம் சிறப்பிக்கப்படுகிறது):
git branch --all
- எந்தெந்த கிளைகள் தங்கள் வரலாற்றில் குறிப்பிட்ட Git கமிட்டை உள்ளடக்கியிருக்கின்றன என்பதை பட்டியலிடுங்கள்:
git branch --all --contains கமிட்_ஹாஷ்
- தற்போதைய கிளையின் பெயரைக் காட்டு:
git branch --show-current
- தற்போதைய கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்:
git branch கிளையின்_பெயர்
- ஒரு குறிப்பிட்ட கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்:
git branch கிளையின்_பெயர் கமிட்_ஹாஷ்
- ஒரு கிளையின் மறுபெயரிடு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது):
git branch -m|–move பழைய_கிளையின்_பெயர் புதிய_கிளையின்_பெயர்
- கணினியில் ஒரு கிளையை நீக்கு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது):
git branch -d|–delete கிளையின்_பெயர்
- தொலை களஞ்சியத்தில் ஒரு கிளையை நீக்கு:
git push தொலை_களஞ்சிய_பெயர் --delete தொலை_கிளையின்_பெயர்